LATEST NEWS
“அய்யோ வலிக்குது… கதறித் துடித்த பெண்..” பப்ளிக்ல கிஸ் பண்ணதற்காக கொடுக்கப்பட்ட 22 சாட்டையடி… உலகை அதிரவைத்த ஷாக்கிங் சம்பவம்..!!
இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில் நடந்துள்ள ஒரு சம்பவம் உலகையே அதிரவைத்துள்ளது. அங்குள்ள ஒரு பொது இடத்தில் சம்மந்தப்பட்ட பெண் ஒருவர் முத்தமிட்ட குற்றத்திற்காக, அவருக்குச் சுரமாரியாக 22 சாட்டையடிகள் வழங்கப்பட்டுள்ளன. அந்தப் பெண் வலியால் துடிதுடித்துக் கத்திய போதிலும், யாருமே அதைப் பொருட்படுத்தவில்லை; அங்கு கூடியிருந்தவர்களில் பலரும் இதனை வேடிக்கை பார்த்ததுடன், தங்களது செல்போன்களில் வீடியோவும் பதிவு செய்தனர். தற்போது இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்தில் ஆச்சே மாகாணத்தில் ஒரே நாளில் மொத்தம் 6 பேருக்குப் பொதுமக்களுக்கு முன்பாக சாட்டையடித் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் பொதுவெளியில் முறையற்ற விதத்தில் நடந்து கொண்டதற்காக 4 பேரும், சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக 2 பேரும் தண்டிக்கப்பட்டனர். இவர்களுக்குக் குற்றத்தின் தீவிரத்தைப் பொறுத்து 9 முதல் 22 சாட்டையடிகள் வரை வழங்கப்பட்டன. இதில் அதிகம் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு அதிகபட்சமாக 22 சாட்டையடிகள் அடிக்கப்பட்ட நிலையில், தண்டனைக்குப் பிறகு அவர் எழுந்து நிற்பதற்குகூட மற்றவர்களின் உதவி தேவைப்பட்டது.
இந்தோனேசியாவிலேயே ஆச்சே மாகாணத்தில் மட்டுமே கடுமையான ‘ஷரியா சட்டம்’ நடைமுறையில் உள்ளது. இங்கு மது அருந்துதல், சூதாட்டம், ஓரினச்சேர்க்கை மற்றும் திருமணத்திற்கு முந்தைய அல்லது புறம்பான உறவுகளில் ஈடுபடுதல் போன்றவற்றுக்குக் பொதுவெளியில் சாட்டையடி கொடுக்கும் தண்டனை வழங்கப்படுகிறது. இத்தகைய கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற தண்டனைகளுக்கு எதிராக ‘ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல்’ மற்றும் ‘ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்’ போன்ற சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
