LATEST NEWS
ஐயோ கடவுளே.. மின்சாரம் பாயும் தண்டவாளத்தில் விழுந்த நபர்.. நொடியும் யோசிக்காமல் 20 வயது இளைஞர் செய்த காரியத்தை பாருங்க.. மெய் சிலிர்க்க வைக்கும் வீடியோ..!!
அமெரிக்காவின் சிகாகோ நகரில், மின்சாரம் பாயும் ரயில் தண்டவாளத்தில் தவறி விழுந்த நபர் ஒருவரை, 20 வயதான அந்தோணி பெர்ரி என்ற இளைஞர் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றியுள்ளார். தண்டவாளத்தில் விழுந்த நபருக்கு எந்த நேரத்திலும் ரயில் மூலமாகவோ அல்லது மின்சாரம் தாக்கியோ உயிரிழப்பு ஏற்படும் அபாயம் இருந்த நிலையில், சற்றும் தயங்காமல் தண்டவாளத்தில் இறங்கிய அந்தோணி பெர்ரி துரிதமாகச் செயல்பட்டு அவரைப் பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தார்.
இந்த வீரதீரச் செயலுக்காக அந்தோணி பெர்ரிக்குப் பல தரப்பிலிருந்தும் பாராட்டுகளும் அங்கீகாரமும் குவிந்து வருகின்றன. தன்னலமற்ற அவரது துணிச்சலையும் மனிதநேயத்தையும் கௌரவிக்கும் விதமாக, அவருக்குப் பரிசாகப் புதிய கார் ஒன்று வழங்கப்பட்டுப் பாராட்டப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களிலும் இச்சம்பவம் வைரலாகி, பலரும் அந்த இளைஞரின் வீரத்தைப் புகழ்ந்து வருகின்றனர்.
