LATEST NEWS
புத்தகக் கொள்முதலில் மெகா ஊழல்.. “முதல்ல உதயநிதியை விசாரிங்க” உண்மை தெரியும்… புது குண்டை தூக்கிப்போட்ட மாணிக்கம் தாகூர்..!!
புத்தக முறைகேடு வழக்கில் முந்தைய திமுக ஆட்சியில் சிறப்புத் திட்டங்களுக்கான அமைச்சராகப் பதவி வகித்த உதயநிதி ஸ்டாலினிடம் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) கட்டாயம் விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இந்த முறைகேடு குறித்து விவரித்த அவர், நூலகங்களுக்கான புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் 70,674 போலிப் புத்தகங்களைக் கணக்குக் காட்டி ஒரு தனியார் நிறுவனம் பணம் வசூல் செய்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இது ஒரு மிகப்பெரிய அளவிலான ஊழல் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இந்த மாபெரும் புத்தகக் கொள்முதல் ஊழலை மறைப்பதற்காகவே திமுகவினர் மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் மடைமாற்றும் வேலைகளில் ஈடுபட்டு வருவதாகவும் மாணிக்கம் தாகூர் கடுமையாகச் சாடியுள்ளார். அவரது இந்தக் கருத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
