“திருமணமான 3 மாதங்களிலேயே இப்படியா…?” வீட்டில் வெடித்த சண்டை.. கணவரை கொடூரமாக தீர்த்துக்கட்டிய மனைவி.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“திருமணமான 3 மாதங்களிலேயே இப்படியா…?” வீட்டில் வெடித்த சண்டை.. கணவரை கொடூரமாக தீர்த்துக்கட்டிய மனைவி.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டம் யமுனாநகர் பகுதியில், திருமணமான மூன்று மாதங்களிலேயே கணவரை மனைவி கல்லால் நசுக்கிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சங்கர்கர் காவல் நிலையப் பகுதியைச் சேர்ந்த சேகர் பன்சால் (35) என்பவருக்கும், உர்மிளா கேவட் (30) என்பவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் சேகரின் மகனுடன் வசித்து வந்த நிலையில், சேகரின் குடிப்பழக்கம் காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த நவம்பர் 9-ஆம் தேதி பிற்பகல் சுமார் 3:30 மணியளவில் இருவருக்கும் இடையே மீண்டும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த உர்மிளா, அங்கிருந்த கல்லை எடுத்து சேகரின் தலையில் பலமுறை கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தற்பொழுது இந்தக் கொடூரத் தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இச்சம்பவம் குறித்து சங்கர்கர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நவம்பர் 11-ஆம் தேதி உர்மிளா கேவத்தை போலீசார் கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். உதவி ஆணையர் (ACP) பரா வேத் வியாஸ் தலைமையிலான காவல்துறையினர், வெளியாகியுள்ள வீடியோ காட்சிகள் மற்றும் பிற தடயங்களைக் கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்குப் பிறகே கொலைக்கான முழுமையான காரணம் தெரியவரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in