புடிங்க அவங்களை..! குடியிருப்புக்குள் நுழைந்த மர்ம நபர்கள்… அலறி அடித்து சுற்றிவளைத்த பெற்றோர்கள்.. கடைசியில் போலீஸ் சொன்ன பகீர் உண்மை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

புடிங்க அவங்களை..! குடியிருப்புக்குள் நுழைந்த மர்ம நபர்கள்… அலறி அடித்து சுற்றிவளைத்த பெற்றோர்கள்.. கடைசியில் போலீஸ் சொன்ன பகீர் உண்மை..!!

Published

on

புனேவின் பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில் குழந்தை கடத்தல் கும்பல் நடமாடுவதாகப் பரவிய வதந்திகளால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் அச்சமும் ஏற்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை (நவம்பர் 13) மோஷி கிராமத்தில் உள்ள சிவாஜிவாடி பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த இரண்டு நபர்களைக் கண்ட அப்பகுதி மக்கள், அவர்கள் குழந்தை கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர்கள் எனச் சந்தேகித்து அங்கு திரண்டனர். அப்போது அங்கிருந்தவர்களால் எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டதால், அப்பகுதியில் குழந்தை கடத்தல் கும்பல் சுற்றித் திரிவதாக வதந்திகள் காட்டுத்தீயாகப் பரவிப் பெற்றோர்களிடையே பீதியை கிளப்பியது.

Advertisement

இதனையடுத்து சம்பவம் குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், அந்த இரு நபர்களுக்கும் எந்தவொரு குழந்தை கடத்தல் முயற்சியிலும் தொடர்பில்லை என்பதை உறுதிப்படுத்தினர். அவர்கள் நன்கொடை வசூலிப்பதற்காகவே அந்தக் குடியிருப்பு வளாகத்திற்குள் நுழைந்ததாகவும், எனவே பொதுமக்கள் வதந்திகளை நம்பி அச்சப்பட வேண்டாம் என்றும் காவல்துறையினர் தெளிவுபடுத்தியுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in