“அம்மாவுக்கு உதவுங்க..” பள்ளி வாட்ஸ்அப் குரூப்பில் வந்த மெசேஜ்.. தாயை கத்தியால் குத்திவிட்டு 9-ஆம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு..!! – cinefeeds
Connect with us

CRIME

“அம்மாவுக்கு உதவுங்க..” பள்ளி வாட்ஸ்அப் குரூப்பில் வந்த மெசேஜ்.. தாயை கத்தியால் குத்திவிட்டு 9-ஆம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு..!!

Published

on

அசாம் மாநிலம் கவுஹாத்தியில் 9ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவன் ஒருவன், தனது தாயைக் கத்தியால் குத்திவிட்டு, கட்டிடத்தின் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்ட சோகம் அரங்கேறியுள்ளது. அசாமின் கவுஹாத்தியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்த அந்தச் சிறுவன், பாமுனி மைதம் பகுதியில் தனது தாயுடன் வசித்து வந்துள்ளான்.

சம்பவத்தன்று இரவு சிறுவன் வீட்டில் வைத்து தனது தாயைக் கத்தியால் குத்தியுள்ளான். அதன் பிறகு வீட்டை விட்டு வெளியேறிய அவன், தான் தன் தாயைத் தாக்கியது குறித்துப் பள்ளியின் வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்டுள்ளதுடன், தன் வீட்டைக் கண்டுபிடித்து தன் தாய்க்கு உதவுமாறு தனது வகுப்புத் தோழர்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளான். பின்னர் நகரின் ஏபிசி பகுதிக்குச் சென்ற அவன், அங்குள்ள ஒரு கட்டிடத்தின் மாடியில் இருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்துகொண்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement

இந்தத் தாக்குதலில் படுகாயங்களுடன் வீட்டில் கிடந்த சிறுவனின் தாய் உடனடியாக மீட்கப்பட்டு, கவுஹாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, மாணவன் தாயைக் கத்தியால் குத்தியதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in