LATEST NEWS
“ரூ.75,000 பயிர்க்கடன் தள்ளுபடி” ஒரே குடும்பத்தில் இருவர் கடன் வாங்கியிருந்தால் யாருக்கு கிடைக்கும்…? வெளியான மிக முக்கிய தகவல்..!!
அரசின் ரூ.75,000 பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ், ஒரே குடும்பத்தில் இருவர் கடன் பெற்றிருந்தால் அவர்களில் யாருக்கு இந்தச் சலுகை கிடைக்கும் என்ற குழப்பம் தற்போது விவசாயிகளிடையே எழுந்துள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலரும் பயிர்க்கடன் பெற்றிருக்கும் சூழலில், அனைவருக்கும் தள்ளுபடி கிடைக்குமா அல்லது ஒருவருக்கு மட்டுமா என்ற கேள்விக்கு அரசு விதிகளின்படி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தள்ளுபடி விதிமுறைகளின்படி, ஒரு தனிநபர் ஒன்றுக்கும் மேற்பட்ட பயிர்க்கடன்களைப் பெற்றிருந்தால், அவற்றில் எது அதிகபட்ச தள்ளுபடித் தொகைக்குத் தகுதி பெற்றுள்ளதோ அந்த ஒரு கடன் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும். மற்ற கடன்களுக்கு இந்தத் தள்ளுபடி சலுகை பொருந்தாது என்பது விதியாகும்.
இதே நடைமுறைதான் ஒரு குடும்பத்திற்கும் பின்பற்றப்படுகிறது. அதாவது, ஒரே குடும்பத்தில் கணவன், மனைவி என இருவர் தனித்தனியாகப் பயிர்க்கடன் பெற்றிருந்தாலும், இருவரின் கடன்களில் யாருடைய கடன் அதிகபட்ச தள்ளுபடிக்குத் தகுதி பெற்றுள்ளதோ, அந்த ஒரு கடன் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
