LATEST NEWS
அய்யோ கடவுளே..! நூலிழையில் தப்பிய 3 உயிர்கள்… சாலையில் திரிந்த மாடுகளால் நடந்த விபரீதம்… நெல்லையில் நடந்த பகீர் சம்பவம்..!!
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் அம்பை சாலையில் ஏராளமான கால்நடைகள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன. இந்நிலையில், அப்பகுதி சாலையில் இரண்டு மாடுகள் ஒன்றோடொன்று ஆக்ரோஷமாக முட்டி மோதி சண்டையிட்டுக் கொண்டிருந்தன.
அப்போது, அவ்வழியாகத் தம்பதியினர் தங்களது குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். சாலையில் சண்டையிட்டுக் கொண்டிருந்த மாடுகள் திடீரென ஓடிவந்து, தம்பதியினரின் இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதி முட்டின. இதில் நிலைதடுமாறிய கர்ப்பிணிப் பெண் மற்றும் குழந்தை உட்பட 3 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் அவர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்ட நிலையில், உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் ஓடிவந்து அவர்களை மீட்டனர்; அதிர்ஷ்டவசமாக 3 பேரும் பெரிய அளவிலான ஆபத்தின்றி உயிர் தப்பினர்.
இந்த சம்பவம் தொடர்பான அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. மேலும், சாலைகளில் கால்நடைகளை சுதந்திரமாகத் திரியவிடும் உரிமையாளர்கள் மீது மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள மாடுகளைப் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
