“ஆட்சியைக் கவிழ்க்க தி.மு.க. முயற்சி” ஸ்டாலினே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துட்டார்… அமைச்சர் அருண்ராஜ் பரபரப்பு குற்றசாட்டு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஆட்சியைக் கவிழ்க்க தி.மு.க. முயற்சி” ஸ்டாலினே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துட்டார்… அமைச்சர் அருண்ராஜ் பரபரப்பு குற்றசாட்டு..!!

Published

on

தி.மு.க.வின் குதிரை பேரம் குறித்து முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் குற்றம் சாட்டியுள்ளார். முன்னாள் அமைச்சர் நேரு இல்லத் திருமண விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், “விரைவில் நமது ஆட்சி உதயமாகத்தான் போகிறது, அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும்” என்று கூறியதைச் சுட்டிக்காட்டி, அவர் தனது சமூக வலைதளப் பதிவில் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

2026 ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதல்-அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, கூட்டணி ஆட்சியை வெற்றிகரமாக நடத்தி வருவதாக அமைச்சர் அருண்ராஜ் குறிப்பிட்டுள்ளார். கொளத்தூர் தொகுதி மக்களாலேயே தோற்கடிக்கப்பட்ட மு.க.ஸ்டாலின், அதிகாரம் பறிபோன பதற்றத்தில் தற்போதைய ஆட்சியைக் கவிழ்க்க திரைமறைவில் குதிரை பேர முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும், இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு 2031 வரை பதவியில் இருக்க வேண்டிய நிலையில், ஆறு மாத முடிவிலேயே தி.மு.க. ஆட்சி அமையும் என மு.க.ஸ்டாலின் பேசுவது அவரது குதிரை பேர முயற்சிகள் முன்னேறுவதைக் காட்டுவதாக அமைச்சர் அருண்ராஜ் விமர்சித்துள்ளார். மேலும், முந்தைய ஆட்சியின் போது பல்வேறு துறைகளில் ஊழல் செய்தது போதாதென்று, தற்போது எதிர்க்கட்சியாக இருந்து கொண்டும் குதிரை பேரம் நடத்துவது குறித்து மு.க.ஸ்டாலின் மக்களுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in