“அடப்பாவிகளா.. இப்படியெல்லாம் கூட ஏமாற்றுவார்களா..?” ஏடிஎம் மையத்தில் சிறுவர்களை ஏமாற்றி கும்பல் செய்த காரியத்தை பாருங்க.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!! – cinefeeds
Connect with us

CRIME

“அடப்பாவிகளா.. இப்படியெல்லாம் கூட ஏமாற்றுவார்களா..?” ஏடிஎம் மையத்தில் சிறுவர்களை ஏமாற்றி கும்பல் செய்த காரியத்தை பாருங்க.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் தியோரியா பகுதியில், ஏடிஎம் மையத்திற்குப் பணம் எடுக்க வருபவர்களின் கவனத்தைத் திசைதிருப்பி, அவர்களின் கார்டுகளை நூதன முறையில் மாற்றி மோசடியில் ஈடுபட்ட கும்பல் குறித்த அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. சம்பவத்தன்று ஏடிஎம் மையத்திற்குள் நுழைந்த மூன்று மோசடியாளர்கள், அங்கு கார்டு மூலம் பணம் எடுத்துக் கொண்டிருந்த சிறுவர்களைக் குறிவைத்துள்ளனர். சிறுவர்களின் கவனத்தைத் திசைதிருப்பிய அந்தக் கும்பலில் ஒருவர், அவர்கள் அழுத்தும் ரகசிய பின் எண்ணை ரகசியமாக நோட்டமிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, மற்றொரு நபர் சிறுவர்களுக்கு உதவி செய்வது போல நடித்து, கண் இமைக்கும் நேரத்தில் அவர்களின் ஏடிஎம் கார்டை மாற்றிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இந்தத் துணிகர மோசடி தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானதைத் தொடர்ந்து, காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு அந்தக் கும்பலைச் சேர்ந்த இரண்டு மோசடியாளர்களைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், பொதுமக்களிடம் இருந்து நூதன முறையில் திருடப்பட்ட 64 ஏடிஎம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கும்போது முன்பின் தெரியாத நபர்களை உள்ளே அனுமதிக்கக் கூடாது எனவும், உதவி செய்வது போல வருபவர்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் காவல்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in