“ஹோட்டலில் ரூம் புக் செய்த காதல் ஜோடி..” இரவு 10 மணிக்கு கதவை உடைத்துப் பார்த்த போலீஸுக்கு காத்திருந்த பகீர் காட்சி.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை..!! – cinefeeds
Connect with us

CRIME

“ஹோட்டலில் ரூம் புக் செய்த காதல் ஜோடி..” இரவு 10 மணிக்கு கதவை உடைத்துப் பார்த்த போலீஸுக்கு காத்திருந்த பகீர் காட்சி.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள தனியார் விடுதி அறை ஒன்றில், இளைஞர் ஒருவர் தனது அண்ணியின் தங்கையைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டுத் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படகான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாபர்பூர் விமான நிலையச் சாலையில் உள்ள கே.ஜே. இன்டர்நேஷனல் ஹோட்டலில் இந்தக் கோரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் 20 வயதான ஜெய் விகாஸ் மற்றும் அவரது அண்ணியின் உடன்பிறந்த தங்கையான 23 வயது அழகுக்கலை நிபுணர் பிரியா கேசரி என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. திங்கட்கிழமை மதியம் 1 மணியளவில் கணவன்-மனைவி எனக் கூறி இவர்கள் அறை எடுத்துத் தங்கியுள்ளனர். இரவு 10 மணியளவில் உணவு ஆர்டர் எடுப்பதற்காக விடுதி ஊழியர்கள் கதவைத் தட்டியபோது உள்ளிருந்து எவ்விதப் பதிலும் வராததால் காவல்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது, குளியலறையில் பிரியா கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்ததும், அறையில் ஜெய் விகாஸ் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்திருந்ததும் தெரியவந்தது.

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், ஜெய் விகாஸ் மற்றும் பிரியா ஆகிய இருவரும் காதலித்து வந்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில், பிரியாவின் குடும்பத்தினர் அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயித்து, வரும் ஜனவரி மாதம் திருமணம் நடைபெற இருந்ததால் ஜெய் விகாஸ் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். சம்பவத்தன்று பிரியாவுக்குக் குங்குமம் வைத்துத் திருமணம் செய்து கொள்ளும் நோக்கில் ஜெய் விகாஸ் குங்குமத்தைக் கையோடு கொண்டு வந்துள்ளார். ஆனால், பிரியா தன்னைத் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் ஆத்திரமடைந்த ஜெய் விகாஸ், அவரது கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டுத் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in