CINEMA
விஜய் எனக்கு பிடித்த நடிகர்னு சொன்னேன்.. உடனே கூப்பிட்டு சொன்ன அந்த ஒரு வார்த்தை… நடிகை மதுபாலா ஓபன் டாக்..!!
தமிழில் கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான ‘அழகன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக மதுபாலா அறிமுகமானார். சென்னையில் பிறந்த இவர், சுமார் 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளியான ‘ரோஜா’ திரைப்படம் இவருக்கு தமிழ்நாடு சிறப்பு விருதை பெற்றுத் தந்தது; தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ‘ஜென்டில்மேன்’, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ‘மிஸ்டர் ரோமியோ’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
நடிகை மதுபாலா அளித்த பேட்டியில், 90களின் காலகட்டத்தில் தான் வெற்றி பெற்றதற்கு சர்ச்சையான விஷயங்களைத் தவிர்த்ததும், சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பொதுவெளியில் பகிர வேண்டாம் என தனது அக்கா ஹேம மாலினி கூறியதைப் பின்பற்றியதும் காரணம் எனத் தெரிவித்துள்ளார். மேலும், தனது 30வது வயதில் திருமணம் செய்துகொண்டதாகவும், சினிமாவில் ஆர்வம் இல்லாத தனது மகள் லண்டனில் வர்த்தகம் படித்ததாகவும், சினிமாவுக்கு வந்தது திட்டமிடாமல் நடந்த கனவு போன்றது என்றும், இயக்குநர் மணிரத்னம் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் உடனான அனுபவம் மிகவும் ஆழமானது என்றும் பகிர்ந்துள்ளார்.
தனக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் விஜய் ஆகியோரைப் பிடிக்கும் என்றும், ஒரு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தனக்கு மிகவும் பிடிக்கும் எனக் கூறியதை அடுத்து விஜய் தன்னைத் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தார் என்றும் மதுபாலா குறிப்பிட்டுள்ளார். இறுதியாக, தமிழ் சினிமாவில் மீண்டும் நடிப்பதற்கு ஆர்வமாக இருப்பதாகவும், புதிய வாய்ப்புகள் கிடைத்தால் தவறாமல் பயன்படுத்திக் கொள்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
