“இனி நீ எங்கும் போக வேண்டாம்… என்னுடனே இரு…” கையெடுத்து மன்னிப்பு கேட்ட தந்தை… 8 வருட பிரிவுக்குப் பின் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறிய நெகிழ்ச்சி சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CINEMA

“இனி நீ எங்கும் போக வேண்டாம்… என்னுடனே இரு…” கையெடுத்து மன்னிப்பு கேட்ட தந்தை… 8 வருட பிரிவுக்குப் பின் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறிய நெகிழ்ச்சி சம்பவம்..!!

Published

on

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்களைச் சந்திப்பதற்காக அவர்களது குடும்பத்தினர் வருகை தந்துள்ளனர். நேற்றைய தினம் நடைபெற்ற கடித டாஸ்க் அனைவரையும் கண்கலங்க வைத்தது. உள்ளே 8 போட்டியாளர்கள் உள்ள நிலையில், பிக்பாஸ் கொடுத்த டாஸ்க் மூலம் நான்கு போட்டியாளர்களின் கடிதங்கள் மட்டுமே படிக்க அனுமதிக்கப்பட்டன; இதனால் முனியம்மா, ப்ரித்வி, ஜேசன் ஆகியோரின் கடிதங்கள் தீயில் எரிக்கப்பட்டன.

77 நாட்களைக் கடந்து செல்லும் பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் ஷாதிகா மற்றும் முகேஷ் ஆகிய இருவரும் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில், நேற்றைய தினம் டிடிஎஃப் மற்றும் அன்சர் இருவரும் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டனர். இந்த வாரம் நாமினேஷன் மற்றும் டாஸ்க் எதுவும் இல்லை என்று பிக்பாஸ் அறிவித்துள்ளதால் போட்டியாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர்

Advertisement

மக்கள் எதிர்பார்த்த ‘ஃபிரீஸ் டாஸ்க்’ தற்போது சாதாரண முறையிலேயே ஆரம்பமாகியுள்ளது. இதில் வினோத் மற்றும் லக்ஷ்மி பிரியாவின் உறவினர்கள் வீட்டிற்குள் வந்தனர். முன்னதாக தனது கதையைப் பகிர்ந்தபோது 8 ஆண்டுகளாகப் பெற்றோரைப் பிரிந்திருப்பதாக லக்ஷ்மி ப்ரியா கூறியிருந்த நிலையில், தற்போது வீட்டிற்குள் வந்த அவரது பெற்றோர் அவரிடம் மன்னிப்பு கேட்டதுடன், “இனி நீ எங்கும் போக வேண்டாம், என்னுடனே இரு” எனக் கூறியுள்ளனர். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு லக்ஷ்மி தனது குடும்பத்துடன் ஒன்று சேர்ந்த தருணம் ஒட்டுமொத்த பார்வையாளர்களையும் கண்கலங்க வைத்துள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in