LATEST NEWS
அனைவரையும் சிறக்க வைக்கும்’… டி,டி-யின் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா…? ஷாக்கான ரசிகர்கள்
தமிழகத்தில் பல்வேறு தொலைக்காட்சிகள் உள்ள நிலையில் விஜய் டிவியில் நம் அனைவர்க்கும் பிடித்த டிடி சின்னத்திரை லேடி சூப்பர் ஸ்டார் என்று கூறி விடலாம். இவர் உடைய கடின உழைப்பினால் அதிக அளவிற்கு ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். இவர் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றார் என்றால் அதை பார்க்க ரசிகர்கள் மிக ஆவலுடன் இருப்பார்கள்.
அந்த வகையில் டிடி தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒரு சில ஷோக்களை தொகுத்து வழங்கியும் மட்டும் இல்லாமல் நடுவராகவும் இருந்து வருகின்றார்.இந்நிலையில் டிடி-யிடம் சமீபத்தில் ஒரு பேட்டியில் ரிலேஷன்ஷிப் உறவுகள் குறித்து கேட்டுள்ளனர்.
அப்போது அவர் கூறுகையில் டிடி ‘வாழ்க்கையில் காதல் இரண்டு பேரிடமும் இருக்க வேண்டும், சூழ்நிலை காரணமாக அது உடையவும் செய்யும்.அப்போது ஒரு சிலர் நம்மை ஆதரிப்பார்கள், சிலர் கீழே தள்ளிடுவாங்க, நாம் தான் அதையெல்லாம் ஒரு பொருட்டாக கொள்ளாமல் தள்ளி வச்சுட்டு முன்னேற வேண்டும்.
விவாகரத்து ஆன நாள் என் மனதில், எப்படியாவது கோர்ட்டுக்கு போகவேண்டும் என்ற எண்ணம் தான் ஓடிக்கொண்டே இருந்தது.அதன் பிறகு இப்போது வரை பேசவில்லை, சந்திக்க கூட இல்லை, ஆனாலும், வாழ்க்கை கடந்து சென்றுக்கொண்டே தான் உள்ளது, கிடைச்ச வாழ்க்கைக்கு கடவுளுக்கு நன்றி’ என கூறியுள்ளார்