பகீர்..! ராகி களி சாப்பிட்ட கொஞ்ச நேரத்தில்.. வாய், மூக்கில் ரத்தம் கசிந்து துடிதுடித்து இறந்த கணவர்.. பிரேதப் பரிசோதனையில் அம்பலமான மனைவியின் கொடூரச் செயல்..!! – cinefeeds
Connect with us

CRIME

பகீர்..! ராகி களி சாப்பிட்ட கொஞ்ச நேரத்தில்.. வாய், மூக்கில் ரத்தம் கசிந்து துடிதுடித்து இறந்த கணவர்.. பிரேதப் பரிசோதனையில் அம்பலமான மனைவியின் கொடூரச் செயல்..!!

Published

on

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே உள்ள பேலாளம் கிராமத்தைச் சேர்ந்த 35 வயதான டெம்போ ஓட்டுநர் மகேஷ் என்பவருக்கும், தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 32 வயதான முனிரத்னா என்பவருக்கும் திருமணமாகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான மகேஷ், வீட்டுச் செலவுக்குப் பணம் கொடுக்காமல் தினமும் மது அருந்திவிட்டு வந்து மனைவி சம்பாதிக்கும் பணத்தையும் பறித்துச் சென்றுள்ளார். இதனைத் தட்டிக்கேட்ட முனிரத்னாவை அவர் தொடர்ந்து அடித்துத் துன்புறுத்தி வந்ததால், கணவரைக் கொலை செய்ய முனிரத்னா திட்டமிட்டுள்ளார். அதன்படி, கடந்த நவம்பர் 13-ஆம் தேதி இரவு வீட்டில் தயாரித்த ராகி களியில், தானியங்கள் கெடாமல் இருக்கப் பயன்படுத்தப்படும் விஷ மாத்திரைகளைக் கரைத்துக் கலந்து கணவருக்குக் கொடுத்துள்ளார்.

மறுநாள் காலை கடுமையான வயிற்றுவலியால் துடித்த மகேஷை, அவரது அண்ணன் தளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தார். கணவர் வீட்டிலேயே இறந்துவிடுவார் என நினைத்து வேலைக்குச் சென்ற முனிரத்னா, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்து அங்கு விரைந்துள்ளார். கணவர் உயிர் பிழைத்தால் உணவில் விஷம் கலந்த உண்மை வெளிவந்துவிடும் என அஞ்சிய முனிரத்னா, சிகிச்சைக்குப் பணம் இல்லை எனக் கூறி மகேஷை வலுக்கட்டாயமாக வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். மகேஷின் அண்ணன் சிகிச்சைக்கான செலவைத் தானே ஏற்பதாகக் கூறியும் அதனை ஏற்க மறுத்த அவர், கணவரை வீட்டிற்கு அழைத்து வந்த சிறிது நேரத்திலேயே மகேஷின் வாய் மற்றும் மூக்கிலிருந்து ரத்தம் வெளியேறி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisement

மகேஷின் திடீர் மரணத்தில் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் தளி காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, உடலை மீட்ட காவல்துறையினர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்தனர். அந்த அறிக்கையில் மகேஷ் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்திருந்தது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேகத்தின் பேரில் மனைவி முனிரத்னாவிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட கொடுமை தாங்காமல் ராகி களியில் விஷம் கலந்து கொடுத்துக் கொன்றதை முனிரத்னா ஒப்புக்கொண்டதை அடுத்து, அவரைக் கைது செய்த தளி காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in