CINEMA
“இது என் பொறுப்பின் தொடக்கம்..!” இளைய புரட்சித் தலைவி த்ரிஷா பேரவை’-யில் இணைந்த பிரபல திருநங்கை நடிகை.. இணையத்தில் தீயாய்ப் பரவும் பதிவு..!!
திருநெல்வேலி தச்சநல்லூரைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜகோபால் என்பவர், நடிகை த்ரிஷாவின் பெயரில் ‘இளைய புரட்சித் தலைவி த்ரிஷா பேரவை’ என்ற நற்பணி இயக்கத்தை அண்மையில் தொடங்கினார். இந்தப் பேரவை மூலமாக ஏழை, எளிய மக்களுக்குத் தேவையான பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், சட்ட உதவிகள் தேவைப்படும் சாமானிய மக்களுக்கு இலவசமாக வழக்கறிஞர்களை நியமித்து உதவவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், த.வெ.க. தலைவர் விஜய்யுடன் இணைந்து த்ரிஷா தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதாகவும் ராஜகோபால் பேசியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், திருநங்கையும் நடிகையுமான விஜே வைஷு, இந்தத் த்ரிஷா பேரவையில் இணைந்துள்ளதாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாகப் பதிவிட்டுள்ளார். த்ரிஷாவுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள அவர், “இளைய புரட்சித் தலைவி த்ரிஷா பேரவையில் இணையப் பெருமையுடன் தயாராக இருக்கிறேன். நெல்லையில் தொடங்கும் இந்தப் புதிய பயணத்தில், த்ரிஷா அவர்களுக்கு எனது ஆதரவையும் பங்களிப்பையும் வழங்கி, உங்களுடன் இணைந்து முன்னேற உறுதியுடன் பயணிக்கிறேன்; இது ஒரு புதிய தொடக்கம் மட்டுமல்ல, என் பொறுப்பின் தொடக்கமும் கூட” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே இந்தப் பேரவையின் பெயருக்கு எதிராக ஜெ. தீபா சட்ட நடவடிக்கை எடுப்பதாக எச்சரித்துள்ள சூழலில், தற்போது பிரபல திருநங்கை நடிகை விஜே வைஷு இப் பேரவையில் இணைந்திருப்பது தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் மேலும் கவனம் பெற்றுள்ளது.
