CINEMA
“என்ன ஆச்சு திரிஷாவுக்கு..? திடீர்னு குரங்கு போட்டோ போட்டு இப்படி ஒரு கேப்ஷன் வச்சிருக்காங்க…” இன்ஸ்டா ஸ்டோரியை பார்த்து புலம்பும் நெட்டிசன்ஸ்..!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகத் திகழும் திரிஷா கிருஷ்ணன் பெயரில், திருநெல்வேலியைச் சேர்ந்த தொழிலதிபர் தலைமையில் ‘இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை’ என்ற நற்பணி மன்றம் தொடங்கப்பட்டது. இது இணையத்தில் விவாதமாக மாறியதோடு, தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்யுடன் இணைந்து திரிஷா அரசியலில் ஈடுபடுவாரோ என்ற கேள்வியும் எழுந்தது. இதற்கிடையே, இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாத திரிஷா கார்த்திகை தீபம் அன்று கர்நாடக மாநிலத்தில் உள்ள ஸ்ரீ சாரதாம்பாள் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார்.
இந்நிலையில், திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குரங்கு புகைப்படத்தைப் பகிர்ந்து, மனிதர்களைக் குரங்குடன் ஒப்பிட வேண்டாம் என்ற கேப்ஷனைப் பதிவிட்டுள்ளார்.

அவர் எதற்காக இந்தப் பதிவைப் பகிர்ந்தார் என்ற கேள்வி எழுந்த நிலையில், குரங்கு கையில் மாலை இருப்பது போன்ற புகைப்படத்தைப் பகிர்ந்ததை வைத்தே திரிஷா இப்படியான பதிவை வெளியிட்டுள்ளார் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
