தனது பூர்வீக வீட்டை தானமாக வழங்கிய எஸ்பிபி! யாருக்கு கொடுத்தார் தெரியுமா? நெகிழவைக்கும் தகவல் – cinefeeds
Connect with us

LifeStyle

தனது பூர்வீக வீட்டை தானமாக வழங்கிய எஸ்பிபி! யாருக்கு கொடுத்தார் தெரியுமா? நெகிழவைக்கும் தகவல்

Published

on

எஸ்.பி.பி தனது பூர்வீக வீட்டை கடந்த பிப்ரவரி மாதம் காஞ்சி சங்கரமடத்துக்கு தானமாக வழங்கினார் என தெரியவந்துள்ள நிலையில் அவரின் ம றை வுக்கு காஞ்சி சங்கராசாரியார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

உடல் நலக்குறைவால் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த 25ஆம் திகதி கா ல மா னார். பாடும் நிலா பாலு என்று அன்புடன் அழைக்கப்படும் அவருடைய ம ர ணம் சினிமா துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

அவர் உடல் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவருடைய பண்ணை வீட்டில் அரசு மரியாதையுடன் 71 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. மறைந்த எஸ்.பி.பியின், பூர்வீக வீடு ஆந்திர மாநிலம் நெல்லூரில் மாவட்டத்தில் இருந்தது. அவர் சென்னைக்கு குடிவந்து விட்டாலும் அந்த வீடு நெல்லூரில் அப்படியே இருந்து வந்தது. இதை வேத பாடசாலை அமைப்பதற்காக,

காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரரை நேரில் சந்தித்து, சங்கரமடத்துக்கு கடந்த பிப்ரவரி மாதம் தானமாக அளித்தார்.  எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் குடும்பம் பாரம்பரியமிக்கது. அவர் தந்தை எஸ்.பி.சம்பமூர்த்தி, ஹரிஹதா வித்வான். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகளின் தீவிர பக்தர். அதனால் பல கர்நாடக சங்கீத வித்வான்கள் இவர் வீட்டில் பாடல்கள் பாடியுள்ளனர்.

Advertisement

இதனிடையில் காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சார்பில் எஸ்பிபி மறைவுக்கு வெளியிடப்பட்டுள்ள இரங்கல் செய்தியில், இசையுலகின் ஒப்பற்ற நாயகனாக விளங்கிய எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவு இசை உலகினர் மட்டுமல்லாது

அனைத்து மக்களுக்கும் மிகுந்த வருத்தத்தை அளிக்ககூடிய ஒன்றாகும். திரையிசைக்கு அப்பாற்பட்டு ஆன்மிகத்திலும் பற்று கொண்டவராக விளங்கினார். பல பக்தி பாடல்களை பாடி மக்களிடையே பக்தி மணம் பரப்பியவர்.

Advertisement

காஞ்சி சங்கர மடத்தின் மீதும் சங்கராச்சாரியார்கள் மீதும் ஆழ்ந்த பக்தியும், மிகுந்த மரியாதையும் கொண்டவர். கடந்த பிப்ரவரி மாதம் நெல்லூரில் உள்ள அவரது பூர்வீக வீட்டை மடத்திற்கு வேத நாத பாடசாலை தொடங்குவதற்கு தானமாக கொடுத்து, அவருடைய பக்தியை வெளிப்படுத்தினார்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு மன அமைதி கிடைக்க வேண்டி மகாத்ரிபுரசுந்தரி சமேத சந்திர மவுலீஸ்வர சாமியை பிரார்த்திக்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in