“என்னுடன் 30 வருடம் ஈஸி கிடையாது”..! பிக் பாஸ் சுரேஷ் சக்ர்வர்த்தியின் மனைவியா இது..? இணையத்தில் வைரலாகும் அரிய புகைப்படம்.. – cinefeeds
Connect with us

Uncategorized

“என்னுடன் 30 வருடம் ஈஸி கிடையாது”..! பிக் பாஸ் சுரேஷ் சக்ர்வர்த்தியின் மனைவியா இது..? இணையத்தில் வைரலாகும் அரிய புகைப்படம்..

Published

on

பிக்பாஸ் புகழ் சுரேஷ் சக்ர்வர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது மனைவியுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சுரேஷ் சக்கரவர்த்தி. இவரை 80ஸ் கிட்ஸ் எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள். சுரேஷ் சக்ரவர்த்தி பிரபல தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர். பிறகு ஆஸ்திரேலியாவில் ரெஸ்டாரண்ட் நடத்தி வருகிறார்.

கே பாலச்சந்தர் இயக்கிய அழகன் படத்தில் நடித்து இருப்பார். சன் டிவியில் பிரபலமான, 90ஸ் கிட்ஸ் ஃபேவரெட் ஷோ பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியை இயக்கி இருக்கிறார். எனக்குள் ஒருத்தி என்ற தொடரை எழுதி, இயக்கி, அதில் நடித்தும் இருக்கிறார். இந்நிலையில் தற்போது சுரேஷ் சக்ரவர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இன்று 30-வது திருமண நாளை கொண்டாடும் அவர், தனது மனைவியுடன் கல்யாணத்தில் எடுத்து கொண்ட வின்டேஜ் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Advertisement

மேலும், ”என்னுடன் 30 வருடம் வாழ்ந்தது சாதாரண விஷயம் கிடையாது. நீ அதை செய்து காட்டியிருக்கிறாய். நன்றி சிக்கு. 30-வது திருமண நாள் வாழ்த்துக்கள். லவ் யூ” என அவர் பதிவிட்டுள்ளார். சுரேஷ் சக்ரவர்த்தியின் இந்த பதிவுக்கு ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருவதுடன், அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் அடித்து வருகிறது.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Suresh Chakravarthi (@suresh.chakravarthy)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in