ஊருக்கே ஆக்சிஜன் கொடுத்தவருக்கு கொரோனாவால் நேர்ந்த சோகம்..! – cinefeeds
Connect with us

Uncategorized

ஊருக்கே ஆக்சிஜன் கொடுத்தவருக்கு கொரோனாவால் நேர்ந்த சோகம்..!

Published

on

தனது வாழ்வின் பெரும் பகுதியை மரங்களுக்காக ஒதுக்கிய இயற்கை ஆர்வலர் ஒருவர் ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் பட்டியலா மாவட்டத்தில் உள்ள தப்லான் கிராமத்தைச் சேர்ந்தவர் இயற்கை ஆர்வலர் ஹர்தயல் சிங் போக்குவரத்து நிறுவனத்தில் சுருக்கெழுத்தராக பணியாற்றி கடந்த 2013 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

Advertisement

அதன்பின் கடந்த 10 வருடங்களாக 10,000 த்துக்கும் மேற்பட்ட மரங்களை நட்டு அந்தக்கிராமத்தில் ஒரு சிறிய காட்டையே உருவாக்கி விட்டார். இதற்காக தினமும் தனது மிதிவண்டியில் மரங்கன்றுகளையும், அதற்கு தேவையான தண்ணீரையும் எடுத்துச் செல்வாராம்.

இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஹர்தயல் சிங்கிற்கு ஆக்சிஜன் கிடைக்க தாமதமானதால் அவர் கடந்த 25 ஆம் தேதி உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Advertisement

இப்படி மரங்களுக்காக தனது வாழ்வின் பெரும் பகுதியை ஒதுக்கி நேசித்து வந்த ஹர்தியால் சிங்கின் உடல் அவர் வளர்த்த காட்டிலேயே அடக்கம் செய்யப்பட்டது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in