ஆமையால் நின்று போன திருமணம்: ப.ரி.த.வி.ப்பில் மணமகளின் தந்தை – cinefeeds
Connect with us

Uncategorized

ஆமையால் நின்று போன திருமணம்: ப.ரி.த.வி.ப்பில் மணமகளின் தந்தை

Published

on

திருமணத்தில் கடைசி நேரத்தில் மாப்பிள்ளை வீட்டினர் கேட்ட வரதட்சணையால் திருமணம் நின்று போயுள்ளது.

மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் உள்ள ஒரு கல்யாண மாப்பிள்ளை இந்த ஆண்டு பிப்ரவரி 10 ஆம் தேதி ராமநகர் பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் , ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்துள்ளார்.

Advertisement

நிச்சயதார்த்தத்திற்கு முன்பு, மணமகனின் குடும்பத்திற்கு தங்கமும் பணமும் வரதட்சணையாக வழங்கப்பட்டன.

நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு, மணமகனின் குடும்பத்தினர் மணமகளின் உறவினர்களிடம் அதிகமாக வரதட்சணை கேட்டு தகராறு செய்துள்ளனர்.

Advertisement

குறித்த மாப்பிள்ளை குடும்பத்தினர் 21 கால் நகங்கள் கொண்ட ஆமை மற்றும் ஒரு கருப்பு லாப்ரடோர் நாய் ஆகியவற்றை வரதட்சணையாக கோரியதால் அந்த கல்யாணம் நின்று போயுள்ளது.

மாப்பிள்ளை வீட்டினர் ஏற்கனவே மணப்பெண்ணின் குடும்பத்தினரிடமிருந்து ரூ .2 லட்சம் ரொக்கமும், 10 கிராம் தங்கமும் வரதட்சணையாக கொடுத்தும், திருமண நாள் நெருங்கிய தருணத்தில் மாப்பிள்ளை வீட்டினர் இவ்வாறு கேட்டதால் பெண்ணின் தந்தை அதிர்ச்சியடைந்தார்.

Advertisement

குறித்த பெண்ணின் தந்தை காவல்நிலையத்திற்கு சென்று மணமகன் 21 கால் நகங்கள் கொண்ட ஆமை, ஒரு கருப்பு லாப்ரடோர் நாய், ஒரு புத்தர் சிலை, ஒரு சமாய் விளக்கு ஸ்டாண்ட் மற்றும் ரூ .10 லட்சம் வரதட்சணை கொடுத்தால் தான் தன் மகளை கல்யாணம் செய்து கொள்வதாக சொன்னதை கூறியுள்ளார்.

தற்போது பொலிசார் அந்த மாப்பிள்ளை மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in