LATEST NEWS
அவர் ஒரு சேடிஸ்ட்…. குழந்தைங்க பார்த்தா வெறிப்புடிச்சுடும்….. கோபத்தில் பொங்கிய பயில்வான்….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் நானே வருவேன். இந்த திரைப்படம் நேற்று வெளியாகிறது என்பதை இரண்டு நாட்களுக்கு முன்பு தான் தெரியவந்தது. ஏனென்றால் இந்த படத்திற்கான எந்த ப்ரமோசனம் செய்யவில்லை. செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் தனுஷுடன் இந்துஜா, எல்லி ஆவ்ரம், பிரபு, யோகி பாபு, சரவண சுப்பைய்யா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். நானே வருவேன் திரைப்படத்தில் தனுஷ் கதிர், பிரபு என்று இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கதிராக வரும் தனுஷ் சிறுவயதிலேயே வித்தியாசமாக நடந்து கொள்கிறார். மேலும் ஒரு பெண்ணின் ஆடையையும் எரித்து விடுகிறார். அதன் பின் ஒரு வேட்டைக்காரனாக வரும் செல்வராகவரிடம் கதிருக்கு பழக்கம் ஏற்படுகின்றது. இவ்வாறு இருக்க இரண்டு தனுசுகளும் வளர்கின்றனர் பிரபுவாக வரும் தனுசுக்கு மனைவியும் ஒரு மகளும் உள்ளார்.
மூவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றன இதனிடையே ஒரு நாள் பிரபுவாக வரும் தனுஷின் மகளுக்கு அமானுஷ்யமாக சில விஷயம் நடக்கின்றது. அதன் மூலம் கதிரை பற்றி கதையையும் அவர் செய்யும் கொடுமைகளையும் தெரிந்து கொள்கின்றார்கள். பிரபு தனது மகளை காப்பாற்றினாரா? கதிரை அவர் என்ன செய்தார்? என்பதே இந்த திரைப்படத்தின் கதை. இந்த திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வழக்கம்போல் பயில்வான் ரங்கநாதன் இந்த திரைப்படத்தை குறித்து சில விமர்சனங்களை வெளியிட்டுள்ளார்.
அதாவது, செல்வராகவன் இதற்கு முன் சாணி காகிதம் என்ற மோசமான திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படத்திலிருந்து வெளிவர முடியாத நிலையில் தற்போது இந்த படத்தை இயக்கியுள்ளார். அவர் இன்னும் சாடிஸ்டாக தான் இருக்கிறார் என்று கூறியுள்ளார். இந்த படத்திற்கு கலைப்புலி தாணு ஏன் விளம்பரம் செய்யவில்லை என்பதை படத்தை பார்த்த பிறகு நன்றாக தெரியும் என்று அவர் கூறியுள்ளார். இது குழந்தை குட்டிகளோடு பார்க்கக்கூடிய படம் கிடையாது. நல்ல படங்கள் எடுக்க வேண்டும் என்று செல்வராகவனுக்கு எண்ணம் இல்லை. இந்தப் படத்தை குழந்தையுடன் பார்க்க வந்தால் அது குழந்தைகளுக்கு வெறி பிடித்து விடும் என்று மிகவும் மோசமான ரிவ்யூ கொடுத்துள்ளார்.
