குடியரசுத் தலைவர் கையால்…. தேசிய விருது பெற்ற சூர்யா…. பெருமைமிகு தருணம்….. வைரல் வீடியோ….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

குடியரசுத் தலைவர் கையால்…. தேசிய விருது பெற்ற சூர்யா…. பெருமைமிகு தருணம்….. வைரல் வீடியோ….!!!!

Published

on

டெல்லியில் இன்று நடைபெற்ற விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கையால் நடிகர் சூர்யா தேசிய விருது பெற்றார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. சுதா கோங்குரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த திரைப்படம் சூரரை போற்று. உண்மை கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகிய நல்ல வரவேற்பை பெற்றது. அந்த திரைப்படத்தின் சூர்யா அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து விட்டார் என்று தான் கூற வேண்டும்.

இவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இன்று தேசிய விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்று வருகிறது. அந்த விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கையால் நடிகர் சூர்யா அவர்கள் தேசிய விருதை பெற்றார். அவர் தேசிய விருது பெறுவது இதுதான் முதன்முறை. நடிகர் சூர்யா விருது பெற்றதை அவரின் மனைவியும், நடிகையுமான ஜோதிகா கண்டு ரசித்தார். சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பிஜிஎம், சிறந்த கதை, சிறந்த டீச்சர் படம் என்ற ஐந்து விருதுகளை வென்றுள்ளது சூரரை போற்று. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement

 

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in