LATEST NEWS
என் பொண்டாட்டி கிட்ட இந்த அல்வா தோத்துப்போச்சு…..! ஒரே போடு போட்ட ரவீந்தர்…. முடியலடாபா சாமி….!!!!
தன் மனைவி மகாலட்சுமி அல்வாவை விட ஸ்வீட் ஆனவர் என்று தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். ரவீந்திர் சந்திரசேகரும், மகாலட்சுமியும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் சமூக வலைத்தளங்களில் மிகவும் பேசும் பொருளாக அமைந்தது. திருமணத்திற்கு பிறகு இவர்கள் பல youtube சேனல்களுக்கு இன்டர்வியூ கொடுத்தனர்.
அதில் தங்கள் காதல் கதையை பற்றி தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ரவீந்தர் மகாலட்சுமியை வைத்து விஜய் டிவி வந்தால் மகாலட்சுமி என்ற நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் ரவீந்திரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது.
https://twitter.com/vijaytelevision/status/1576444507108904960
அதேபோல் மகாலட்சுமியிடமும் பல கேள்விகள் கேட்கப்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் எவ்வளவு புரிந்து வைத்துள்ளார்கள் என்று பல போட்டிகள் வைத்தனர். மேலும் அந்த நிகழ்ச்சியின் போது ரவீந்திரிடம் அல்வாவை கொடுத்தார்கள்.
நான் சுவைத்த இனிப்பில் மகாலட்சுமியை விட கம்மி தான் இந்த அல்வா என்று கூறினார். இதை பார்த்த பலரும் திருமணம் முடிந்ததிலிருந்தே மனைவியின் புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு வரும் ரவீந்தரின் கேப்டன் தான் வேற லெவலில் உள்ளது என்று கூறி வருகின்றனர். மனிதர் ஃபுல் ஃபார்மில் இருக்கிறார் என்று கிண்டல் செய்து வருகின்றனர். தன் உருவத்திற்கு இப்படி ஒரு அழகான பெண் மனைவியாக கிடைத்ததால் தான் பலரும் தன்னை விமர்சிக்கிறார்கள் என்று ரவீந்தர் சமீபத்தில் ஒரு பேட்டி கூட தெரிவித்திருந்தார்.
