தவளை தன் வாயாலே கெடுமா?….. அது இவங்களுக்கு சரியா இருக்கு….. தன் கெரியரை கெடுத்துக் கொண்ட 5 பிரபலங்கள்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தவளை தன் வாயாலே கெடுமா?….. அது இவங்களுக்கு சரியா இருக்கு….. தன் கெரியரை கெடுத்துக் கொண்ட 5 பிரபலங்கள்….!!!

Published

on

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தவறவிட்டால் அது நமக்கே பின்னால் ஆபத்தை விளைவிக்கும். அதே போல் தான் கிடைக்கும் வாய்ப்பை தவற விட்டு அதன் பிறகு தற்போது வருத்தப்பட்டு வரும் சில நடிகர்கள் உள்ளனர். அவர்களின் முதலாவது இடத்திலேயே பிடிப்பது அப்பாஸ், தமிழ் சினிமாவில் சாமிங்க் பாயாக இவர் காதல் தேசம் என்ற திரைப்படத்தின் மூலமாக என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

 

Advertisement

முதலில் ஜீன்ஸ் படத்தில் இவர் தான் நடிக்க இருந்தது. ஆனால் ஒரு வருடத்திற்கு எல்லாம் ஒரு படத்தில் நடிக்க முடியாது என்று கூறி மறுத்துவிட்டார். அதை தொடர்ந்து பல சுமாரான திரைப்படங்களில் நடித்ததால் அப்படியே சினிமாவில் இருந்து ஒதுங்கிவிட்டார். அடுத்தது அசின், தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு பெற்ற நடிகையாக வளம் வந்த ஆசினுக்கு தொடர்ந்து பாலிவுட்டில் நடிப்பதற்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது சல்மான்கான் நடிப்பில் ரெடி என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். தமிழ்நாடு மற்றும் இலங்கை இடையே அப்போதுதான் பெரிய பிரச்சனை நடந்து கொண்டிருந்தது.

 

Advertisement

இந்த படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடக்க இருந்தது. அதனால் பலரும் இந்த படத்தில் நீங்கள் நடிக்க வேண்டாம் என்றும் கூறிவந்தனர் . ஆனால் அசின் எனக்கு கேரியர் தான் முக்கியம் நான் போவேன் என்று கூறினார். அதன் பிறகு மொத்தமாக கோலிவுட் வாய்ப்பை இழந்துவிட்டார். அடுத்த வரிசையில் அமலாபால் பிரபல நடிகையாக இருந்த போதே திருமணம் செய்து கொண்ட இவர் திருமண வாழ்க்கையிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும் ஆனால் அங்கேயும் தோல்விதான். இயக்குனர் ஏ.எல். விஜயை திருமணம் செய்த ஓராண்டில் விவாகரத்து செய்த இவர் அதன் பிறகு நடித்த வந்தும் பெரிய வரவேற்பு பெறவில்லை.

 

Advertisement

வடிவேலு, இவரை போல் யாராலும் நடிக்கவே முடியாது என்று அளவிற்கு பெயரும் புகழும் பெற்று மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். நன்றாக இருக்கும் போது அரசியலுக்குள் நுழைந்து தேவையில்லாமல் கேப்டன் விஜயகாந்த்துக்கு எதிராக பேசி தன் தலையில் தானே மண்ணை அள்ளி கொட்டிக்கொண்டார். இதனால் பல வருடங்கள் நடிக்காமல் ஓரம் கட்டப்பட்டார். தற்போது தான் மீண்டும் பழைய நிலைமைக்கு வந்து கொண்டிருக்கின்றார்.

அடுத்தது மோகன், மைக் மோகன் என்று அழைக்கப்பட்ட இவர் மாஸ் நடிகராக இருந்தாலும், இவருக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்துக் கொண்டிருந்த சுரேந்தர் இவருக்கு வாய்ஸ் கொடுப்பதை நிறுத்தினார். இதனால் தனது ஒரிஜினல் வாய்ஸில் பேசினார். அதை பார்த்த பலரும் என்ன இது வாய்ஸ் இப்படி இருக்கு என்று கூறிவந்தனர். அதன் பிறகு சில திரைப்படங்கள் மிகவும் மொக்கையாக இருந்ததால் சினிமாவிலிருந்து கிளம்பி விட்டார்.

Advertisement

பிரசாந்த், பெண்கள் ரசிகர்களை அதிக அளவில் வைத்திருக்கும் இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். கதை கூட கேட்காமல் ஓகே சொல்லி பட படங்களில் நடித்து பிளாப் ஆகி அவருக்கு பெரிய சறுக்களை கொடுத்தது. திருமண வாழ்க்கையும் சிக்கலாக அமைய தொடர்ந்து சினிமாவில் இருந்து விலகி இருந்தால் தற்போது மீண்டும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in