வெற்றிமாறன் போன்ற நபர்களால்….. நாட்டுக்கே ஆபத்து…..! நீங்கெல்லாம் மனநோயாளியா?…. கொந்தளித்த இயக்குனர்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

வெற்றிமாறன் போன்ற நபர்களால்….. நாட்டுக்கே ஆபத்து…..! நீங்கெல்லாம் மனநோயாளியா?…. கொந்தளித்த இயக்குனர்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் இயக்கிய படங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், அந்த படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட். பெரும்பாலும் தனுசை வைத்து தான் இவர் படங்களை இயக்குகிறார். தற்போது விடுதலை என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து வித்தியாசமான படங்களை இயக்குவதில் இவர் பெயர் போனவர்.

சமீபத்தில் விடுதலை இயக்க கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் பாராட்டு விழாவில் சில கருத்துக்களை பேசியிருந்தார். அந்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருவள்ளுவருக்கு காவி அடையாளம் கொடுக்கிறார்கள். ராஜராஜ சோழனை இந்துவாக மாற்ற முயற்சிக்கிறார்கள் என்று கூறியிருந்தார். இந்த கருத்து இணையத்தில் பெரும் சர்ச்சையானது.

Advertisement

வெற்றிமாறனின் பேச்சுக்கு பல எதிர்ப்புகள் எழுந்தது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு திரைப்பட விழாவில் பேசிய இயக்குனர் பேரரசு வெற்றிமாறன் ராஜராஜ சோழனை இந்துவாக காட்டுகிறார்கள் என்று கூறினார். அப்படி என்றால் ராஜராஜ சோழன் வேற்று மதத்தை சேர்ந்தவரா? கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் எல்லா கடவுளையும் வணங்குகிறார்கள். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இதில் என்ன பிரச்சனை இருக்கின்றது.

தனித்தனி மாகாணங்களாக ஒரு காலத்தில் இருந்தோம். ஆனால் தற்போது இந்தியா என்ற நாட்டுக்குள் இருக்கிறோம் . அப்படி என்றால் நாம் இந்தியர்கள் இல்லை என்று கூற முடியுமா? போலி நாத்திகர்களால் தான் நாட்டுக்கு ஆபத்து என்று கடுமையாக விமர்சித்திருந்தார். ஒரு காலத்தில் சைவர், வைணவர் என்று 2 பிரிவு இருந்தது. இதில் ராஜ ராஜ சோழன் சைவ சமயத்தை பின்பற்றினார். இதனை குறிப்பிடும்படிதான் வெற்றிமாறன் பேசியுள்ளார் என்று இணையத்தில் வெற்றிமாறனுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பேரரசு பல காலமாக தொடர்ந்து பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். அதனால் தான் வெற்றிமாறனை எதிர்த்து பேசுகிறார் என்று பலரும் கூறி வருகின்றனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in