LATEST NEWS
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு குரல் கொடுப்பவர் இவர்தானா….. இத்தனை நாள் எங்க இருந்தீங்க பாஸ்…..! வைரலாகும் புகைப்படம்….!!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலம். இந்த நிகழ்ச்சி தமிழ் மட்டும் இல்லாமல் மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, கன்னட, மொழிகளிலும் ஒளிபரப்பாகி ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்படுகின்றது. தமிழில் இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார்கள். பிக் பாஸ் சீசன் 6 தற்போது அக்டோபர் ஒன்பதாம் தேதி தொடங்கி விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வருகின்றது.
இதில் அமுதவாணன், ஜி. பி. முத்து, சாந்தி, ஜனனி, ஆயிஷா, ராபர்ட் மாஸ்டர். உள்ளிட்ட 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாள் நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில், தற்போது சண்டை ஆரம்பித்துள்ளது. இதனால் பிக் பாஸ் போட்டி கலை கட்டியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடையாளமாக இருப்பது அந்த கம்பீரமான குரல்.
அந்த குறலின் சொந்தக்காரர் யார் என்று சீசன் 1லிருந்து பலரும் கேட்டு வருகின்றனர். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு குரல் கொடுக்கும் நபரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. அவருடைய பெயர் சச்சிதானந்தம். இவர் தமிழ் மட்டும் இல்லாமல், பாலிவுட் வரை வேலை செய்துள்ளார். இவரின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.
