Uncategorized
‘உலகமெங்கும் பரவும் கொரேனோ கொடிய வைரஸ்’..! 25,000ஆயிரம் சதுர மீட்டர் 1000-படுக்கைகள்… “போக்குவரத்தை துண்டித்த அரசு”..?
சீனாவில் அதிவேகமாக பரவிவரும் கொரேனோ வைரஸ் இதன் பாதிப்பினால் இதுவரை 26 பேர் இறந்துள்ளனர் 800க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள் மேலும் இந்த நோயின் பாதிப்பு தீவிரமாகிறது. மருத்துவர்கள் இதுவரை பார்த்திராத கொடிய நோய்யாக உருவெடுத்துள்ளது. மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மேலும் இந்த கொரேனோ கொடிய வைரஸ் சீனாவில் தொடக்கி தற்போது அமெரிக்கா , ஜப்பான் , வடகொரியா , சிங்கப்பூர் , தாய்லாந்து தென்கொரியா போன்ற நாடுகளில் பரவி உள்ளது. மேலும் முதலில் இந்த வைரஸ் பரவிய நகரமான ஊக்கான் பகுதிக்கு போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
நாளை சீனாவில் புத்தாண்டு பிறப்பதால் பல்வேறு பகுதி மக்கள் சீனாவிற்கு கொண்டாட்டத்திற்கு வந்து செல்லும் போது கொரேனோ வைரஸ் பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்தால் முக்கியமான நகர பகுதி மக்களை பாதுகாப்பு பகுதியில் வைக்கப்பட்டுள்ளனர்.
