TRENDING
பிக்பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் இவர் தான்…. இவருக்கு தான் எல்லாம் தெரியும்…. கணித்த முன்னாள் பிக்பாஸ் சர்ச்சை போட்டியாளர்….!!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட எட்டு வாரங்களை கடந்துள்ள இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்டு தற்போது 13 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் உள்ளனர்.
அதே சமயம் இந்த வாரம் டபுள் எலிமினேஷன் கண்டிப்பாக நடைபெறும் என கமல் தெரிவித்த நிலையில் போட்டியாளர்கள் அனைவரும் டென்ஷனில் உள்ளனர். அதே சமயம் அந்த இரண்டு போட்டியாளர்கள் யார் என்பது குறித்து ரசிகர்கள் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இருந்தாலும் அது யார் என்பது குறித்த தகவல் இந்த வாரம் இறுதியில் தான் தெரிய வரும்.
இந்நிலையில் பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பல நெகடிவ் விமர்சனங்களை பெற்ற காயத்ரி ரகுராம் தற்போது அளித்துள்ள பேட்டியில், பிக் பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியில் விக்ரமன் தான் டைட்டில் ஜெயிக்க வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார். அவருக்கு தான் எது சரி என நன்றாக தெரியும் என பாராட்டியுள்ளார். இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
