LATEST NEWS
வாரிசு திரைப்படத்தில் குஷ்பு நடித்த சீன் எங்கே?…. நீக்கப்பட காரணம் என்ன?…. வெளிவந்த தகவல்….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தத் திரைப்படம் முழுக்க குடும்ப பாசத்தை கொண்டுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க சரத்குமார், பிரகாஷ் ராஜ்,யோகி பாபு உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தில் நடித்துள்ளது.
இந்தப் படத்தில் நடிகை குஷ்பூ ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்பட்டது. அது தொடர்பான புகைப்படங்களும் வெளிவந்த நிலையில் தற்போது படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை படத்தில் காணவில்லையே என கலாய்த்து வருகின்றனர். வாரிசு இயக்குனர் படத்தின் நீளம் கருதி குஷ்புவின் காட்சிகளை நீக்கி இருக்கலாம் என கூறப்படுகிறது.
