LATEST NEWS
பிக்பாஸ் விக்ரமன் தங்கையா இவர்?…. மக்கள் கவனத்தை ஈர்த்த தமிழரசியின் புகைப்படங்கள் இதோ….!!!!
விஜய் டிவியில் சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களின் ஒருவர்தான் விக்ரமன்.
அந்த போட்டியில் இவர் வெற்றி பெறுவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் இவர் இரண்டாவது இடத்தை பிடித்தார்.
இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் இறுதி நிகழ்ச்சியின் போது விக்கிரன் பெற்றோர் மற்றும் அவரின் தங்கை கலந்து கொண்டனர்.
அந்த நிகழ்ச்சியில் விக்கிரமனின் தங்கை பேச்சி பலரையும் வெகுவாக கவர்ந்தது.
பிக் பாஸ் வீட்டில் நடைபெற்ற பல பிரச்சனைகள் மற்றும் போராட்டங்களுக்கு இடையே தன்னிலை மாறாமல் எனது அண்ணன் இருந்ததை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்.
பொதுவெளியில் மக்கள் முன் நாம் எது பேசினாலும் நமக்கு ஒரு பொறுப்பு உள்ளது.
அதனை மனதில் வைத்துக்கொண்டு விழிப்புணர்வோடு தன்னிலை மாறாமல் சுயமரியாத இழக்காமல் தனது கொள்கைகளில் இருந்து ஒரு படி கூட விலகாமல் பிக் பாஸ் வீட்டில் முன்னுதாரணமாக எனது அண்ணன் திகழ்ந்தார்.
இவரின் தங்கை என்று சொல்வதற்கே எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது என்று மிகுந்த நிகழ்ச்சியுடன் பேசி இருந்தார்.
அந்தப் பேச்சு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதேசமயம் விக்ரமன் தன்னுடைய தங்கை மிகவும் புத்திசாலித்தனமானவர், அவருடன் பல ஆக்கபூர்வமான விஷயங்களை நான் விவாதித்துள்ளேன்.
இந்த உலகில் நான் வியந்து பார்க்கக் கூடிய பெண்களில் என்னுடைய தங்கையும் ஒருவர் என கூறி இருந்தார்.
இப்படி முன்னுதாரணமாக தன்னுடைய சகோதரி தமிழரசி குறித்து விக்ரமன் பேசியது வைரலான நிலையில் தற்போது தமிழரசியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.
அந்த புகைப்படத்தில் அவர் மிகவும் மாடர்ன் பெண்ணாகவும் அதேசமயம் தைரியமான பெண்ணாகவும் தெரிகின்றார். இவரை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
