காதலியை கரம் பிடித்த இயக்குனர் பி.எஸ்.மித்ரன்…. இணையத்தில் வைரலாகும் அழகிய ஜோடியின் திருமண புகைப்படங்கள்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

காதலியை கரம் பிடித்த இயக்குனர் பி.எஸ்.மித்ரன்…. இணையத்தில் வைரலாகும் அழகிய ஜோடியின் திருமண புகைப்படங்கள்….!!!

Published

on

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் பி எஸ் மித்ரன்.

இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இரும்புத்திரை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.

Advertisement

அந்தத் திரைப்படத்தில் விஷால் , சமந்தா மற்றும் அர்ஜுன் நடித்திருந்தனர்.

இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றதை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து ஹீரோ என்ற திரைப்படத்தை இயக்கினார்.

Advertisement

இந்தத் திரைப்படம் முழுக்க முழுக்க அதிரடி திரில்லர் பாணியில் உருவாகி இருந்தது.

இந்தத் திரைப்படமும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் கார்த்தி நடிப்பில் சர்தார் திரைப்படத்தை இயக்கி ரசிகர்கள் மனதை வெகுவாக வென்றார் இயக்குனர் மித்ரன்.

Advertisement

இந்த திரைப்படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து கே ஜி எஃப் நாயகன் யாஷ் உடன் பிஎஸ் மித்ரன் கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

இந்நிலையில் இயக்குனர் மித்ரனின் திருமணம் மிக எளிமையாக நடந்து முடிந்துள்ளது. பிரபல சினிமா பத்திரிக்கையாளரான ஆஷா மீரா ஐயப்பன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இவர்களின் திருமணத்தில் மேயாத மான் மற்றும் ஆடை போன்ற படங்களில் இயக்குனர் ரத்தினகுமார் மற்றும் இயக்குனர் ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement

தற்போது இவரின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

#image_title

Copyright © 2023 www.cinefeeds.in