“எங்க புள்ளைய உயிரோட எரிச்சி கொன்னுட்டாங்க” அதிர்ச்சியில் தந்தை, பாட்டி அடுத்தடுத்து மரணம்… 3 மாதங்களாக நீதிக்காக அலையும் பரிதாபக் குடும்பம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“எங்க புள்ளைய உயிரோட எரிச்சி கொன்னுட்டாங்க” அதிர்ச்சியில் தந்தை, பாட்டி அடுத்தடுத்து மரணம்… 3 மாதங்களாக நீதிக்காக அலையும் பரிதாபக் குடும்பம்..!!

Published

on

மத்தியப் பிரதேச மாநிலம் உமரியா மாவட்டத்தில் உள்ள மஜோலி கிராமத்தில், இளைஞர் ஒருவர் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவத்தின் சோகத்தால் அவரது தந்தை மற்றும் பாட்டி அடுத்தடுத்து உயிரிழந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. கடந்த ஜூலை மாதம், கிருஷ்ணா என்ற கோலு கேவட் என்ற வாலிபர் மொபைல் சார்ஜ் செய்வது தொடர்பான தகராறில், ஒரு அறையில் பூட்டப்பட்டு பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இளைஞனின் மரணம் தந்த பெரும் அதிர்ச்சியால், அவரது தந்தை கான் சந்த் கேவட் 15 நாட்களிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து, மகன் மற்றும் பேரனை இழந்த துயரம் தாளாமல் அந்த வீட்டின் வயதான பாட்டியும் மரணமடைந்தார். ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த மூன்று மரணங்களால் அந்தக் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Advertisement

இந்தக் கொடூரச் சம்பவம் நடந்து மூன்று மாதங்கள் கடந்த நிலையிலும், குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும் தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். கோலு கேவட் மரண வாக்குமூலம் அளித்திருந்தும் போலீசார் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என உறவினர்கள் கூறுகின்றனர். எனினும், வித்யா பாய் என்ற பெண் குற்றவாளி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவரைத் தீவிரமாகத் தேடி வருவதாக மான்பூர் காவல் நிலைய போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in