CINEMA
அட எவ்ளோ கியூட்…! கோட் படத்தில் விஜய்க்கு மகனாக நடிச்ச சிறுவனின் குடும்ப புகைப்படம் வைரல்….!!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் GOAT. இந்த படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது .வெங்கட் பிரபு முதன் முறையாக நடிகர் விஜய்யுடன் கைகோர்த்த நிலையில் ரசிகர்கள் படத்தின் மீது எதிர்பார்ப்பை வைத்திருந்தனர் . யுவன் சங்கர் ராஜா இசையில் விஜய்யுடன் சேர்ந்து பிரசாந்த், பிரபுதேவா சினேகா உள்ளிட்ட நட்சத்திரங்கள் அனைவருமே நடித்திருந்தனர்.
13 நாள்களில் ரூ.413 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இப்படத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய கதாபாத்திரத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் அகிலன் யார் என்ற கேள்வி இருந்த நிலையில் இவர் “ரவுடி பேபி” எனும் யூடியூப் சேனல் மூலம் பிரபலமானவர். இந்நிலையில் விஜய்யுடன் இந்த சிறுவன் குடும்பத்தோடு எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
View this post on Instagram