CRIME
அய்யோ கொடுமையே..! வீட்டில் கேட்ட அலறல் சத்தம்… சொந்த மகனையே கோடாரியால் அறுத்து கொன்ற தந்தை… மதுபோதையில் நடந்த கொடூர சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் படௌன் மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ஊருக்குள் தந்தை மற்றும் மகன் இருவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில், தந்தை ஆத்திரமடைந்து அருகில் இருந்த கோடாரியால் தனது மகனை வெட்டிக் கொன்றார். இந்தச் சம்பவத்தில் தலைமறைவான தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொடூரச் சம்பவம் படௌன் மாவட்டம் உசைத் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பச்சி கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை நடந்துள்ளது. 35 வயதான ராம் அவதார் தனது தந்தை நரேசுடன் வீட்டில் மது அருந்தும்போது இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. முற்றிய மோதலில் கோபமடைந்த தந்தை நரேஷ், கோடாரியை எடுத்து மகனைத் தாக்கியுள்ளார்.
இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த ராம் அவதார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், காவல்துறையினர் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தப்பியோடிய குற்றவாளி தந்தையைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
