CINEMA
விஜய் மற்றும் த்ரிஷா..? G.O.A.T படத்தில் காத்திருக்கும் சர்பிரைஸ்…!!!

வெங்கட் பிரபு, விஜய் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் கோட். இந்த படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் இடம்பெற்ற மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் படத்தின் ஸ்பெஷல் சாங் விரைவில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வைரலான நிலையில், விஜய், த்ரிஷா இணைந்து நடனமாடிய சாங் சர்ப்ரைஸாக வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.