CINEMA
நடிகர் தனுஷின் புதிய படத்தின் அப்டேட்…. இன்று மாலை 5 மணிக்கு வெளியாவதாக அறிவிப்பு…!!

நடிகர் தனுஷ் கடைசியாக ராயன் என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார். இதனையடுத்து தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தை ‘Dawn Pictures’ சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். இப்படத்தில் நடிக்கும் பிற கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.
இருப்பினும் இந்த படத்தை நடிகர் தனுஷ் இயக்குவதாகவும், அருண்விஜய், அசோக் செல்வன், சத்யராஜ், ராஜ்கிரண், நித்யா மேனன் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தனுஷ் இயக்கி நடிக்க உள்ள புதிய படத்தின் அப்டேட் இன்று மாலை ஐந்து மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு.