LATEST NEWS
மனைவியுடன் இருக்கும் ரொமான்டிக் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் ஹரிஷ் கல்யாண்…. வைரலாகும் க்யூட் புகைப்படம்….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஹரிஷ் கல்யாண். பிரபல திரைப்பட விநியோகஸ்தர் கல்யாணியின் மகன்தான் ஹரிஷ் கல்யாண்.இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அந்தத் திரைப்படத்தில் நடிகை அமலாபாலும் நடித்திருந்தார். அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் அவ்வளவு அதிகமாக கிடைக்காத நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடிக்க தொடங்கினார்.நடிப்பில் தற்போது 100 கோடி வானவில் திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் அந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இதனிடையே சமீபத்தில் சென்னை திருவேற்காட்டில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் பெற்றோர்களால் தனது நிச்சயிக்கப்பட்ட நர்மதா உதயகுமார் என்ற பெண்ணை ஹரிஷ் கல்யாண் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமண நிகழ்ச்சியில் பல திரை பிரபலங்களும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் தனது மனைவியுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய ஹரிஷ் கல்யாண் அந்த புகைப்படங்களை வெளியிட்டு அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க