LATEST NEWS
24 வயது காதலியுடன் சேர்ந்த பப்லு.. பிரேக் அப் ஆன உடனே இப்படி..? வைரலாகும் போட்டோஸ்..!!

தமிழ், கன்னடம், தெலுங்கு போன்ற மொழி திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் பிரித்விராஜ். இவர் முன்னணி நடிகர்கள் நடித்த படத்தில் இரண்டாவது கதாநாயகனாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் 2014-ஆம் ஆண்டு ஒளிபரப்பான வாணி ராணி சீரியலில் ராதிகாவின் கணவராக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான கண்ணான கண்ணே சீரியலில் அப்பா கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றார். நடிகர் பிரித்திவிராஜ் கடந்த 1994-ஆம் ஆண்டு பீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 27 வயதில் ஆட்டிசம் குறைபாடு உள்ள மகன் உள்ளார். திருமணமாகி 18 வருடங்கள் ஒன்றாக இருந்த தம்பதியினர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரித்திவிராஜ்க்கு ஷீத்தல் என்ற இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் சேர்ந்து அடிக்கடி ரீல்ஸ் செய்து வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவார்கள். இவர்களது காதல் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக பிரித்திவிராஜும் சீத்தலும் பிரிந்து விட்டனர். தற்போது இருவரும் ஒன்று சேர்ந்து விட்டதாக தெரிகிறது. அதாவது அனிமல் திரைப்படத்தில் பப்லு, ரன்பீர் கபூர், ராஷ்மிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் சக்சஸ் மீட் மும்பையில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் பப்லு சீத்தலுடன் பங்கேற்றுள்ளார். பப்லு அனிமல் பட பிரபலங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதேபோல சீத்தல் ராஷ்மிகாவுடன் எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படமும் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்து விட்டார்களா என கமெண்ட் செய்து வருகின்றனர்.