LATEST NEWS
ஜவான் வெற்றியைத் தொடர்ந்து விஜய்க்காக காத்திருக்கும் ஷாருக்கான்.. ஏன் தெரியுமா?.. அவரே வெளியிட்ட பதிவு..!!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான அட்லி இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் தான் ஜவான். இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்த நிலையில் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான இந்த திரைப்படம் இதுவரை மொத்தம் ஆயிரம் கோடி வசூலை எட்டியுள்ளது.
இதனால் பட குழுவினர் அனைவரும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். அதேசமயம் ஆயிரம் கோடி வசூலித்த படங்களின் லிஸ்டில் ஜவான் திரைப்படம் இணைந்துள்ளதால் ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் நடிகர் சாருக் கான் நன்மையில் ரசிகர்களுடன் ட்விட்டரில் கலந்துரையாடினார்.
அப்போது விஜய் ரசிகர் பக்கத்தில் இருந்து அவருக்கு வாழ்த்து கூறி ஒரு பதிவு போட்டிருந்தது. அதனைப் பார்த்த ஷாருக்கான் வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி என தெரிவித்துவிட்டு விஜயின் அடுத்த படத்திற்காக ஆவலாக காத்திருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். தற்போது அந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
Thank u for your wishes…. Looking forward to Thalapathy’s next!!! I love Vijay sir!! https://t.co/9gQNwQkBfx
— Shah Rukh Khan (@iamsrk) September 25, 2023