LATEST NEWS
‘விஜயின் நெருங்கிய நண்பரை எதிர்க்கும் சிம்பு’…! “பரபரப்பில் கோலிவுட் வட்டாரம்”…?

நீண்ட இடைவேளைக்கு பிறகு சிம்பு தற்போது வெற்றிகரமாக நடித்து முடித்துள்ள படம் ‘மகா’ இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்த்துள்ளது மேலும் இப்படத்தின் ரிலீஸ் ஆகும் தேதி விரைவில் படக்குழுவினர் அறிவிப்பார்கள். மேலும் இப்படத்தின் வில்லனாக நடிகர் ஸ்ரீகாந்த் நடித்துள்ளதாக தகவல் பரவி உள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது இதில் சிறையில் ஸ்ரீகாந்த் இருப்பது போல அவரை இரு போலீசார் துப்பாக்கியால் மிரட்டுவது போல காட்சிகள் அமைந்துள்ளது.
இதனை வைத்து பார்த்தால் ஸ்ரீகாந்தை தான் இப்படத்தின் வில்லன் என்று உறுதிப்படுத்துகிறது. மேலும் விஜய் நடித்த நண்பன் படத்தில் விஜய்க்கு நெருங்கிய நண்பராக ஸ்ரீகாந்த் நடித்திருப்பார். அதனால் விஜயின் நண்பர் சிம்புவின் வில்லன் என்று பேசப்பட்டு வருகிறது.
இதனையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாக்க உள்ள படம் மாநாடு அதன் படப்பிடிப்பு இம்மாதம் 19ம் தேதி தொடங்க உள்ளது.