LATEST NEWS
தமிழ் நடிகரை இயக்கும் மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குனர்…. யார் தெரியுமா?…. அப்ப ஒரு ஹிட் படம் பார்சல்…!!!

இந்த வருடம் மலையாள சினிமா தான் சக்க போடு போட்டு வருகின்றது. மலையாள சினிமாவில் தற்போது வெளியான படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துக் கொண்டே இருக்கின்றது. பிரேமலு, அதைத்தொடர்ந்து வெளியான மஞ்சமேல் பாய்ஸ் மற்றும் ஆடு ஜீவிதம் போன்ற திரைப்படங்கள் வசூல் பேட்டை நடத்திவரும் நிலையில் தமிழ் ரசிகர்களும் மலையாள திரைப்படங்களை ஆர்வமுடன் பார்த்து வருகிறார்கள்.

#image_title
இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் உருவான மஞ்சுமேல் பாய்ஸ் திரைப்படம் பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியானது. இப்படம் கேரளாவில் நல்ல வசூல் வேட்டை செய்த நிலையில் தமிழிலும் இதனை டப்பிங் செய்து வெளியிட்டார்கள். கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லும் நண்பர்கள் அங்கு குணா குகையில் மாட்டிக் கொண்டு படும் அவஸ்தையை வெளிப்படுத்தும் படமாக இருந்தது.

#image_title
நடிகர் ரஜினி, விக்ரம், சிம்பு, கமல் என பல பிரபலங்கள் இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் சிதம்பரத்தை பாராட்டி இருந்தார்கள். தற்போது இயக்குனர் சிதம்பரம் மலையாள படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தை முடித்தவுடன் நடிகர் விக்ரமுடன் சேர்ந்து புதிய திரைப்படம் ஒன்றை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.