VIDEOS
பள்ளிக் குழந்தைகளுடன் சுதந்திர தினத்தை ஆனந்தமாக கொண்டாடிய நடிகர் விஷால்.. வெளியான புகைப்படங்கள்…!!!
தமிழ் சினிமாவில் முன்னாடி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஷால். இவர் திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். திரைப்பட தயாரிப்பாளர் ஜிகே ரெட்டியின் இளைய மகன் விஷால் சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்தவர். இவர் பெரும்பாலும் ஆக்ஷன் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அதே சமயம் தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரின் கீழ் படங்களை தயாரித்து வருகிறார். நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக திரையுலகில் நுழைந்த விஷால் அதன் பிறகு நடிகராக செல்லமே திரைப்படத்தில் அறிமுகமானார்.அதனைத் தொடர்ந்து சண்டக்கோழி, திமிரு மற்றும் தாமிரபரணி என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்த இவர் தற்போது பிசியான நடிகராக மாறிவிட்டார்.
இந்நிலையில் நேற்று சுதந்திர தினத்தை முன்னிட்டு விஷால் காரைக்குடி அருகில் தெக்கூரில் உள்ள விசாலாட்சி நர்சரி மற்றும் ஆரம்ப பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டார். அங்கு தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்திய விஷால் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் மத்தியில் ஒரு சில வார்த்தைகளை பேசி உரையாடினார்.
மேலும் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம் மற்றும் பள்ளி உபகரணங்களை தன்னுடைய தேவி அறக்கட்டளை சார்பாக விஷால் வழங்கினார். அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க