திருச்செந்தூர் முருகப்பெருமானை திடீரேன தரிசித்த நடிகர் யோகி பாபு… இதுதான் காரணமா?… வெளியான புகைப்படங்கள்… - cinefeeds
Connect with us

LATEST NEWS

திருச்செந்தூர் முருகப்பெருமானை திடீரேன தரிசித்த நடிகர் யோகி பாபு… இதுதான் காரணமா?… வெளியான புகைப்படங்கள்…

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் காமெடியனாக மட்டுமின்றி தற்பொழுது கதாநாயகனாகவும் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெயிலர், ஜவான் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படி படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வரும் நடிகர் யோகி பாபுவிற்கு கடவுள் பக்தியும் அதிகம்.

இவர் தற்பொழுது அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற ஆவணி திருவிழாவில் கலந்து கொண்டுள்ளார். கோவிலில் மூலவர், சத்ரு சம்ஹார மூர்த்தி, வள்ளி தெய்வானை, பெருமாள், ஆகிய சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்தார். நடிகர் யோகி பாபுவை பார்த்த ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

Advertisement

மேலும் யோகி பாபு கோவில் தூய்மை பணியாளரிடம் கைகுலுக்கி நலம் விசாரித்தார். தற்பொழுது இவர் ஜெயிலர் மற்றும் ஜவான் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் வெற்றி அடைந்ததற்காகவும்,  தன் கைவசம் உள்ள திரைப்படங்கள் வெற்றி பெறுவதற்காகவும் சாமி தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகைப்படங்களும் இணையாயத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement