LATEST NEWS
அர்ஜுன் தாஸை காதலிக்கும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி?…. புகைப்படத்தால் பரவிய வதந்திக்கு அவரே கொடுத்த விளக்கம்….!!!!

உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமான படைப்பில் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் தான் ஐஸ்வர்யா லட்சுமி. மலையாள நடிகையான இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ஆக்சன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சமுத்திரகுமாரி பூங்குழலியாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.
இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான கட்டாகுஸ்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் போன்ற திரைப்படங்களில் நடித்த நடிகை அர்ஜுன் தாசு உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை ஐஸ்வர்யா லட்சுமி சமீபத்தில் வெளியிட்டார். அதில் ஹார்டின் எமோஜ் போட்டிருந்ததால் இருவரும் காதலித்து வருவதாக பல செய்திகள் இணையத்தில் உலா வந்தன.
இந்நிலையில் அந்த செய்திக்கு தற்போது ஐஸ்வர்யா லட்சுமி விளக்கமளித்துள்ளார். அதில், என் முந்தைய பதிவு இவ்வளவு பெரிதாக வெடிக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. நாங்கள் எதற்கு சந்தித்தபோது புகைப்படம் எடுத்துக்கொண்டோம். அதை தான் நான் பதிவிட்டேன். நாங்கள் வெறும் நண்பர்கள் மட்டும்தான் எங்களுக்குள் எதுவும் கிடையாது என்று அவர் கூறி விளக்கம் அளித்துள்ளார்.