LATEST NEWS
நடிகை மீனாவுக்கு 2வது திருமணம்…. உண்மை நிலவரம் என்ன?….. இதோ அவரே கொடுத்த விளக்கம்….!!!!

தமிழ் சினிமாவில் 90களில் பலரில் உள்ளங்களையும் கவர்ந்து தனது நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. அவரின் திருமணத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் குறைந்தாலும் சமீப காலமாக அவர் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.இவர் வித்யாசாகர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். பத்து வருடங்களுக்கு மேல் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு மகள் ஒருவர் உள்ளார். கடந்த ஜூன் எட்டாம் தேதி மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக திடீரென உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து தனது கணவரின் இழப்பிலிருந்து தற்போது கொஞ்சம் கொஞ்சமாக நடிகை மீனா மீண்டு வருகிறார். இந்நிலையில் மீனா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக ஒரு செய்தி இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. இந்த திருமணத்தில் மீனாவிற்கு விருப்பமில்லை என்றாலும் அவருடைய பெற்றோர்களின் வற்புறுத்தலின்படி மீண்டும் அவர் திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தனக்கு இரண்டாவது திருமணம் நடக்க இருப்பதாக வெளியாகி உள்ள தகவலுக்கு நடிகை மீனா காட்டமாக பதில் அளித்துள்ளார். அதாவது பணம் மற்றும் பிரபலமாக எதையும் எழுதுவீர்களா? சமூக ஊடகங்கள் நாளுக்கு நாள் மோசமாகி வருகின்றன. உண்மையை தெரிந்து எழுதுங்கள். இது போன்ற தவறான செய்திகளை எழுதினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மீனா எச்சரித்ததாக அவரை நெருங்கிய நண்பர்கள் கூறுகின்றனர்.