LATEST NEWS
ரஜினி மகளைத் தொடர்ந்து இப்போ ராதிகா தங்கை வீட்லையுமா?.. நடிகை நிரோஷா போலீசில் பரபரப்பு புகார்..!!

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை நிரோஷா. இவர் ராதிகாவின் உடன்பிறந்த தங்கை. தமிழில் 1988 ஆம் ஆண்டு வெளியான அக்னி நட்சத்திரம் என்ற திரைப்படத்தின் மூலம் இவர் சினிமாவில் ஹீரோயினியாக அறிமுகமானார். அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சூரசம்காரம், செந்தூரப்பூவே மற்றும் பாண்டியநாடு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகின்றார்.
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி என பல மொழி திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். இவர் நடிகர் ராம்கியை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றார். இந்நிலையில் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் இவர் தன்னுடைய வீட்டில் திருடு போய்விட்டதாக கூறி புகார் அளித்துள்ள நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது தேனாம்பேட்டையில் உள்ள ஜெமினி பாசன் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் இவரது வீடு உள்ள நிலையில் வீட்டிலிருந்த சொத்து ஆவணங்கள் திருடு போய்விட்டதாக கூறி போலீசில் இவர் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சந்தேகிக்கும் நபர்கள் மீது போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு ரஜினியின் மகள் ஐஸ்வர்யா வீட்டில் வேலை செய்த பெண் ஒருவர் 70 சவரன் வரை நகை திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில் தற்போது நிரோஷா வீட்டில் சொத்து ஆவணங்கள் திருடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.