CINEMA
தளபதி பா. ரஞ்சித்தின் படையில் நானும் ஒரு அங்கம்….. இசை வெளியீட்டு விழாவில் நடிகை பார்வதி நெகிழ்ச்சி…!!

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மேனன் உட்பட பலர் நடித்த திரைப்படம் தங்கலான். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவானது சென்னையில் நடைபெற்றது. ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகை பார்வதி, கலை வடிவில் அரசியல் போரை முன்னெடுக்கும் தளபதி பா. ரஞ்சித்தின் படையில் நானும் ஒரு அங்கமாக இருக்கிறேன் என்று நெகிழ்ச்சியோடு கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், தமிழில் சினிமா உள்ளிட்ட அனைத்தையும் அரசியலாக தான் அணுக வேண்டும். அரசியல் அற்றது என்று எதுவுமே கிடையாது. சமத்துவமன்மை ஏன் நிலவுகிறது? என்ற கேள்வி அசௌகரியமாக இருந்தாலும் நாம் அதைக் கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.