CINEMA
‘அட்ஜஸ்ட்மெண்ட்க்கு கூப்பிட்டா உடனே இதை செய்ங்க’…. பிரபல நடிகை ரம்யா நம்பீசன் ஓபன் டாக்…

தமிழ் சினிமாவில் குறைந்த திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகை ரம்யா நம்பீசன். மலையாள நடிகை ஆன இவர் தமிழில் ஒரு நாள் இரு கனவு என்ற திரைப்படம் மூலம் முதல்முறையாக அறிமுகமானார்.
அதன் பிறகு ஆட்டநாயகன் மற்றும் குள்ளநரி கூட்டம் உள்ளிட்ட திரைப்படங்களில் தன்னுடைய நடிப்பை இயல்பாக வெளிப்படுத்தியதால் இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தன. மேலும் டமால் டுமீல், சத்யா, சீதக்காதி மற்றும் நட்புனா என்னன்னு தெரியுமா உள்ளிட்ட பல திரைப்படங்களில் வரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் அவர் நடித்த பீட்சா மற்றும் சேதுபதி உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இவருக்கு ஒரு கட்டத்தில் தமிழில் வாய்ப்புகள் குறைந்த நிலையில் தற்போது மீண்டும் 10 வருடங்களுக்குப் பிறகு தெலுங்கு பக்கம் திரும்பி உள்ளார். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை ரம்யா நம்பீசன்.
இவர் தற்பொழுது நடிகைகளை யாராவது அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு கூப்பிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து கூறியுள்ளார். அதாவது, சினிமாவில் காலங்காலமாக அட்ஜெஸ்ட்மெண்ட் என்ற விஷயம் நடிகைகளை போட்டு படுத்திக்கொண்டிருக்கிறது. அவர்களின் திறமையை பார்த்து வாய்ப்பு கொடுக்காமல் அவர்களிடம் வேறு ஒரு விஷயத்தை எதிர்பார்ப்பது எந்த விதத்திலும் நியாயம் ஆகாது என்று பலரும் கூறிவருகின்றனர்.
இந்நிலையில் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து நடிகை ரம்யா நம்பீசன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியதாவது, ‘சினிமாவில் நடிகைகளுக்கு அட்ஜெஸ்ட்மெண்ட் தொல்லை இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. ஆனால் அப்படி நடக்கும்போது அதை தைரியமாக எதிர்கொண்டு பொதுவெளியில் அதைப்பற்றி பேச வேண்டும். அதுமட்டுமின்றி அவ்வாறு அழைப்பவர்களிடம் நடிகைகள் எதைப்பற்றியும் யோசிக்காமல் வலுவான மனநிலையிலிருந்துகொண்டு அதை மறுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். அவரின் இந்த பேட்டியானது தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.