இந்த வருடம் இறுதியில் விஜய் தேவரகொண்டாவுக்கு திருமணம்… முதல்முறையாக சீக்ரெட்டை உடைத்த சமந்தா… வைரலாகும் வீடியோ..!! - cinefeeds
Connect with us

VIDEOS

இந்த வருடம் இறுதியில் விஜய் தேவரகொண்டாவுக்கு திருமணம்… முதல்முறையாக சீக்ரெட்டை உடைத்த சமந்தா… வைரலாகும் வீடியோ..!!

Published

on

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு நடனமாடியதன் மூலம் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்து விட்டார். இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து குஷி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் சமந்தா நடித்து முடித்துள்ள நிலையில் காதல் கதையாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது. இந்நிலையில் சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வரும் நிலையில் இவர்கள் இருவரும் சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்துள்ளனர்.

Advertisement

அந்த பேட்டியில் சமந்தா விடம் விஜய் தேவரகொண்டாவை பற்றியும் அவரின் திருமணம் குறித்தும் கேட்கப்பட்ட நிலையில் அதற்கு சமந்தா பதில் அளித்துள்ளார். அதில், விஜய் தேவார கொண்டவை பார்க்கும் பலரும் அவர் ஒரு ரவுடி என்று நினைப்பார்கள். ஆனால் உண்மையிலேயே அவர் மிகவும் ஒழுக்கமானவர். அவருக்கு ஒரு கெட்ட பழக்கம் கூட கிடையாது. சினிமாவில் காதல் கதைகள் நடிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர். குஷி படத்தில் காதல் நன்றாக வர காரணம் விஜய் தேவர் கொண்டாவும் தான்.

இந்த திரைப்படத்திற்கு பிறகு திருமணம் குறித்து அவரின் கருத்து மாறி உள்ள நிலையில் இந்த வருட இறுதியில் அவர் திருமணம் செய்து கொள்வார். ஒவ்வொரு வருடமும் அடுத்த இரண்டு அல்லது மூன்று வருடத்தில் என கூறிவரும் இவர் இந்த வருட இறுதியில் அவரின் கேர்ள் பிரண்டை திருமணம் செய்து கொள்வார் என்று சமந்தா வெளிப்படையாக பேசியுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Ssmusic Admin இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@ssmusicofficial)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in